இளஞ்சிவப்பு கண் ( கன்ஜங்டிவைட்டிஸ் )
இளஞ்சிவப்பு கண் நோய் ஒரு தொற்றுநோய்
நோய் காரணங்கள்:
· வைரஸ்
· பாக்டீரியா
· அல்ர்ஜி
· தூசி / புகை அலர்ஜி
அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை
· பாதிக்கப்பட்ட கண்ணின் வெள்ளைப் பகுதி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுதல்.
· அதிகரித்த கண்ணீர்.
· கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு.
· அதிகப்படியான சளி வெளியேற்றம்.
· கன்ஜங்டிவா/இமையிணைப்படலம்
· மற்றும் கண் இமைகளில் உண்டாகும் வீக்கம்.
· கண்களில் எரிச்சல். / கண்ணில் தூசி /அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு.
· பார்வையில் ஏற்படும் இடையூறு.
· வெளிச்சத்திற்கு உணர்திறன்.
· காலையில் விழித்தவுடன் கண் இமைகளில் ஏதோ பசை போன்ற பொருள் ஒட்டி இருத்தல்.
உங்களுக்கு இதனில் ஏதேனும் அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகவும்
1. கண் வலி
2. வெளிச்சத்திற்கு உணர்திறன் அதிகம்
3. அதிக சிவப்பு கண்
4. அறிகுறி அதிகமாகுதல்
5. ஹச் ஐ வி , புற்று நோய் இருந்தால்
6. வேறே கண் குறைபாடு இருந்தால்
மருத்துவர் உங்கள் அறிகுறி சோதனை செய்து கண் நோயை கண்டறிவார்
பின்வரும் வழிகளில் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிப்படையாமல் நீங்கள் பாதுகாக்கலாம்:
v உங்களது பாதிக்கப்பட்ட கண் /கண்களை தொடுதல் கூடாது.
v கைகளை முறையாக கழுவுதல் வேண்டும்.
v துண்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை பகிர்தலைத் தவிர்த்தல் வேண்டும்
Comments